தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகள் சில சமூக ஊடகங்களில் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்மைய புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி கூடவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.