தர்பூசணி செய்கையாளர்கள் விசனம்

0
180

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் தர்பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 05ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமையால் தாம் பெரும் நஸ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக குறித்த விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளைஇ வங்கியில் கடன் பெற்று இந்த செய்கையை மேற்கொண்டதுடன் தற்போது அறுவடை செய்யப்பட்ட பழங்களை விற்பனை செய்ய முடியாமையால் வங்கிக்கடனை மீண்டும் திருப்பச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமது நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்ற போதிலும் இதுவரையில் எந்தவொரு அதிகாரியும் தமக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர வில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பயணத்தடையால் தாம் இந் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தமது பிரச்சிணை தொடர்பில் கவனம் செலுத்தி தமக்கான நஸ்டஈட்டை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.