தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!

0
90

நாட்டில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் சேவைகளை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார்.

இந்த ஊழியர்களில் தற்காலிக ஒப்பந்தத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் உள்ளடங்குவதாகவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்களின் பணிகளை நிரந்தரமாக்குமாறு நீண்ட காலமாக தற்காலிக பணியாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனவே உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் இந்த சாதாரண பணியாளர்கள் ஆற்றிய பணியை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.