தற்போதைய இழப்பை செலுத்த கப்பல் உரிமையாளர்கள் இணக்கம்

0
497

எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இழப்பினை கணக்கிட்டு செலுத்த குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணங்கியுள்ளதாக வணிகக் கப்பல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.

கப்பல் விபத்து தொடர்பிலும் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தௌிவூட்டும் ஊடக சந்திப்பொன்று இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், ´இழப்பீடு தொடர்பில் கணக்கிட்டு இழப்பீட்டு தொகையினை வழங்க கப்பலின் உரிமையார்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். காப்புறுதி நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றன. என்றார்.