திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற இளைஞரே நேற்றிரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் கடுகதி ரயிலில் பாய்ந்தே அவா் உயிாிழந்துள்ளாா்.
உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில்இ அவா் திருமணமானவர் என தொியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.