தவளையுடன் ஐஸ்கிரீம் விற்றவரிற்கு கடும் எச்சரிக்கையுடன் 5000 ரூபா தண்டம்!

0
149

தவளையுடன் ஐஸ்கிரீம் விற்றவரிற்கு கடும் எச்சரிக்கையுடன் 5000 ரூபா தண்டம்
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள இரு விற்பனை நிலையங்களிற்கு எதிராக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் திரு. பரமானந்தராசா தினேஷ் இனால் 2024.01.05 தாக்கல் செய்யப்பட்ட உணவகத்திற்கு எதிராக இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றதை தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் பழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டது. மேலும் 14.02.2024 அன்று செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தவளையுடன் கூடிய ஸ்பெஷலினை நுகர்வோருக்கு விற்பனை செய்த குளிர்களி முகாமையாளருக்கு 5000 தண்டப்பணம் அறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.