திருகோணமலையில் அழிவடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்

0
28

திருகோணமலை மாவட்டம் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களை கமநல சேவை நிலைய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட வன்னியனார்மடு, சூரங்கல், கரைச்சைத்திடல் முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 1350 இற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டது. இதனையே அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சாஜித், கிண்ணியா பிரதேச செயலக அதிகாரிகள், விவசாய திணைக்களம் மற்றும் விவசாய சங்கங்களின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் இணைந்து சேத மதிப்பீட்டினை மேற்கொண்டனர்.

இந்த சேத மதிப்பீட்டினை கணிப்பீடு செய்து விவசாயிகளுக்கான முழுமையாக மற்றும் பகுதி அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சாஜித் கூறுகையில்,
தற்பொழுது சேத மதிப்பீட்டு குழுவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வயல்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்- என்றார்.

இதேவேளை, முழுமையான அழிவுகள் மற்றும் பகுதியளவில் அழிவுகள் முதலானவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். எங்களுக்கான இழப்பீடுகளை அவர்கள் மிக விரைவில் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.