திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்: சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுள்ளதாக தெரிவிப்பு

0
219

அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திருகோணமலை உற்துறைமுக வீதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆளுநர் அலுவலகத்துக்குள் செல்ல முட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அதிகளவான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வென்பது இழுத்தடிக்கப்படும் அதேவேளை, மனித உரிமை மீறல்கள் காணி அபகரிப்பு வடகிழக்கில் தொடருகின்றன, என்றாலும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டு நிராகரித்து வீதிக்கு இறங்கியுள்ளனர் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அரசியல் சாணக்கியம் இல்லாதவர்கள் ஒதுங்கி ஓய்வெடுத்துவிட்டு முற்போக்கு சிந்தனையுள்ள இளைய தலைமுறையினர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்ப்பாட்ட்த்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.