26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலையில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்

திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் தொடர்ந்து 5வது நாட்களாக அவர்களை தேடும் முயட்சியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில், நேற்றுமுன்தினம் கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து 4வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் அப்பகுதி மீனவர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் 15 மீனவப்படகுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் புயல் எச்சரிக்கை நிலவுகின்ற காரணத்தால் அரசால் தேடுதல் நடவடிக்கைகளுக்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையால் மீனவர்களது தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் தாம் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்த மீனவர்கள் தற்போது விமானப்படையின் உதவியை தாம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles