சுகாதார ஊழியர்கள் தொழற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் முப்படையினரால் பொதுமக்களுக்கு கொரோணா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கைகள் மும்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நண்பகலின் பின்னர் தடுப்பு மருந்து ஏற்றும் பணிகளை முறையாக இராணுவத்தினரிடமிருந்து சுகாதாரத் துறையினரிடம் கை மாற்றுவதற்கு சுமார் ஒரு மணி நேர தாமதம் ஏற்பட்டது.

முதலில் இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்ட 240 மருந்து வில்லைகள் தீர்ந்துபோனதன் பின்னராக சுகாதாரத்துறையினரால் மறுபடியும் புதிய வில்லைகள் கொண்டுவரப்பட்டு தொடர்ச்சியாக மருந்து வழங்கும் செயன்முறையானது முன்னெடுக்கப்பட்டது
இதன் காரணமாக பொதுமக்களுக்கு காத்திருக்க நேரிட்டது.
60 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு இன்றையதினம் தடுப்புமருந்து வழங்கப்பட்டமையால் பரவலான வயோதிபர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையையும் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளானதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.