திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தவறான முடிவெடுத்த நிலையில் 16 வயது சிறுமி உயிரிழந்ததாக திருகோணமலை பொது வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தவறான முடிவெடுத்த தாய் உட்பட 5 பேரையும் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் என். விதூசிகா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்தார்.
என். நாகேஸ்வரி (31-வயது) என்.வைஸ்னவீ (12-வயது) என். ஐஸ்வர்யா (08-வயது) மற்றும் என். கஜவீர் (02-வயது) ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் தவறான முடிவெடுத்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பூசகர் ஒருவரின் மனைவி பிள்ளைகளே இவ்வாறு தவறான முடிவெடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.