திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ்!

0
704

இந்து தமிழர்களின் மிக முக்கியமான புராதன இடங்களில் ஒன்றான திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது வருமான முகாமை மற்றும் பராமரிப்பு தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, வெந்நீரூற்றை பார்ப்பதற்காக வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளில் ‘இது அநுராதபுரகாலத்தில் பயன்படுத்தப்பட்டது.

தொல்லியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் இது அமைந்திருக்கிறது’, என கூறப்பட்டுள்ளது.

இந்த வெந்நீரூற்று புராண – இதிகாசகாலத்துடன் தொடர்புடையது.

இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியை செய்வதற்காக இந்த 7 கிணறுகளையும் அமைத்தான் என இந்துமத நூல்கள் கூறுகின்றன.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்து தமிழ் மக்கள் தங்களின் புனித இடமாக கன்னியா வெந்நீரூற்றை பேணி வந்திருந்தனர்.

ஆனால், இப்போது இதனை பௌத்தத்துடன் மட்டும் தொடர்புபடுத்தி வரலாறு மாற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது