திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று நண்பகல் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடி அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அவர்களுக்கான சரியான முறையிலான பாதுகப்பு நடவடிக்கைகள், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் அரசினால் வழங்கப்பட வேண்டும் அத்துடன் போக்குவரத்து வசதிகளையும் பெற்றுத்தரவேண்டும் போன்ற 14 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
