திருகோணமலை மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

0
17

திருகோணமலை மூதூர் வலயக் கல்வி வலயத்திற்குட்பட்ட, கிளிவெட்டி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் பீ.கோணேஸ்வரராசா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. அணிநடை உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

பழைய மாணவர்கள்,ஆசிரியர்களின் போட்டி நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தன. அதிதிகளாக மூதூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றமீம், மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் கணணி வளநிலைய முகாமையாளர் எம்.எம்.ஜனூஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கினர்.