திருகோணமலை மூதூர்-மணற்சேனை பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு புதிர் அறுவடை விழா

0
7

திருகோணமலை மூதூர் -மணற்சேனை பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய முறையிலான புதிர் அறுவடை விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. மூதூர் -மணற்சேனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிருவாகமும், கிராம மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டில்களில் வயல்களுக்குச் சென்று, அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் எடுத்துவரப்பட்டு,
பூஜைகள் இடம்பெற்றன. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. பாரம்பரிய முறைப்படி இடம்பெற்ற புதிர் அறுவடை விழாவில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.