திருகோணமலை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய கிறிஸ்தவ பாடஆசிரியர் இடமாற்றம்:மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
23

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிறிஸ்தவ மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் ஒரேயொரு கிறிஸ்தவப் பாட ஆசிரியர் சுமார் 45 கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி கிறிஸ்தவப் பாட ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்டு வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் மாணவர்கள் கிறிஸ்தவப் பாடத்தை கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தமது உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மனுவொன்றை கையளித்து மீண்டும் ஆசிரியரை தமது பாடசாலைக்கு நியமித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.