அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச மக்களின் நலன் கருதி உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலக உளவளத்துணை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ.எஸ்.பஸ்மியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்று இருந்தன இவ் நிலையமானது ஜ.நா.சபையின் பெண்கள் அமைப்பின் நிதி பங்களிப்புடன் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்தரின் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் சிரேஸ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சசிந்திரன் அமைப்பின் இணைப்பாளர் அரவிந்த நவகமுக மற்றும் பெண்கள் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.