திருக்கோவில் குடிநீர் இணைப்பு
வழங்கி வைக்கப்படவுள்ளது

0
154

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 22 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் யுத்தத்தினால் பாதிப்புற்ற மற்றும் குறைந்த வருமானம் உள்ள 56 குடும்பங்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக பாம் பவூண்டேஷன் நிதிப் பங்களிப்புடன் இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இவ் வேலைத் திட்டம் தொடர்பாக பயனாளிகளை தெளிவுபடுத்தும் கூட்டமானது விடய உத்தியோகத்தர் ஜெயர்ஜினி பார்த்தீபன் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று இருந்தன.

இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் குறைந்த வருமானம் பெறும் 56 குடும்பங்களுக்கு சுத்தான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் திருககோவில் பிரதேச செயலாளர் அவர்களின் முயற்சியின் ஊடாக திருக்கோவில் பிரதேச சபையின் பங்களிப்புடனும் பாம்பவூண்டேஷன் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இலவசமாக குடிநீர் இணைப்பக்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் குடிநீர் இணைப்பினைப் பெற்றும் கொள்ளும் பயனாளிகள் மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் கூட்டமானது இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன் திருக்கோவில் பிரதேச தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபையின் நிலையப் பொறுப்பதிகாரி கமலகாந்தன் பாம்பவூண்டேஷன் அமைப்பின் திட்ட முகைமையாளர் அருள்சக்தியன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.