அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய சமுர்த்தி சமுதாய பிரதேச மட்டக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் கிராம மட்ட சமுதாய அமைப்புக்களை தெளிவூட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையார் பி.பரமானந்த் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி கிராம மட்ட சமுதாய அமைப்புக்களில் இருந்து பிரதேச மட்ட சமுர்த்தி சமுதாய அமைப்பினை வலுப்படுத்தி அதனுடாக கிராமங்களில் வாழும் வறிய குடும்பங்களை அடையாளப்படுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவற்கான ஒழுங்கு முறைகள் குறித்து
ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் ஏ.அரசரெத்தினம் சமுர்த்தி சமுகப் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் எஸ்.பி.சீலன் மற்றும் கிராம மட்ட சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.