25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் ஞாயிறு பொது சந்தைக்கு பூட்டு

அம்பாறை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திருக்கோவில் பிரதேச மக்களை கொவிட் 19ல் இருந்து பாதுகாக்கும் நோக்கில் மக்கள் அதிகம் கூடும் திருக்கோவில் பிரதேச ஞாயிறு பொது சந்தை தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டு தினச் சந்தையை முன்னெடுக்க திர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்ளிலும் கொவிட் 19 நோய்த் தாக்கம் நாளாந்தம் அதிகரித்து வருவதுடன் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் முறையான சுகாதார வழிமுறைகளின் ஊடாக கொவிட்19 தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தொடர்ந்தும் திருக்கோவில் பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்குடன் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொலிசார் இராணுவத்தினரின் சிறந்த வழிகாட்டல்களின் ஊடாக திருக்கோவில் பிரதேசம் கொவிட் 19 தொற்று எற்படாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் சமூக இடைவெளிகள் இன்றி மக்கள் அதிகளவில் கூடும் இடமாக திருக்கோவில் பிரதேச ஞாயிறு பொது சந்தை காணப்படுவதன் காரணத்தால் இதனை தற்காலிகமாக மூடிவிட்டு ஏனைய நாட்களில் வழமை போன்று சந்தையை முன்னெடுப்பற்காக திருக்கோவில் பிரதேச மட்ட கொவிட் 19 பாதுகாப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் இ.வி.கமலராஜன் மேலும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles