கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கிராமங்கள் தோரும் எழுமாற்றாக பீ.சீஆர். மற்றும் அன்ரீஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருக்கோவில் தாண்டியடி ஸ்ரீவள்ளிபுரம் மணல்சேனை மற்றும் குடிநிலம் ஆகிய கிராமங்களில் நேற்று சுமார் 25 பேருக்கு எழுமாற்றாக அன்ரீஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இதேவேளை சுகாதார முறைகளை இன்றி அரசின் கொவிட் 19 பயணத்தடை சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காது வீதிகளில் தேவையற்ற முறையில் பயணம் செய்த நபர்களும் அன்ரீஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மேற்படி நடவடிக்கைகளில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.திலகரெத்தின இராணுவம் பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேச கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழுவின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.