திருக்கோவில் பிரதேசத்தில் கர்ப்பிணி
பெண்கள் குறித்து கலந்துரையாடல்

0
304

பொருளாதார நெருக்கடியில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பிரசவகாலத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றிய கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நேற்று திருக்கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பிரசவத்தை எதிர்நோர்க்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்களை பாதுகாக்கும் முகமாக பிரசவகால முன் ஆயத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடல் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன்; தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய தாய்சேய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின்; கலந்துகொண்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த காலப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல்.
கரப்;பகால வலி ஏற்படும் போது வைத்தியசாலைக்கு விரைவில் செல்லக்கூடிய தூரத்தில் கர்ப்பினி பெண் தங்கி இருக்க கூடிய வசதிகளுடன் இடங்களை ஒழுங்குபடுத்தப்படுத்தல் மற்றும் அவசர போக்குவரத்து சேவைகள் 1990 அம்பிலன்ஸ் சேவை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக வாகனம், கிராம சுகாதார பிரிவுகளின் உள்ள முச்சக்கர வண்டியினை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் அவர்களுக்கு எரிபொருள் வழங்குவது பற்றியும் இங்கு கலந்துரையடப்பட்டு முடிவுகள் எடுக்கபட்டது.

இக்கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய தாய்சேய் வைத்திய அதிகாரி ஆகியோருக்கு அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்.மசூத்,திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், திருக்கோவில் சுகாதார பிரிவின் உத்தியோத்தர்கள்,சமூர்த்தி உத்தியோத்தர்கள், கிராம சேவையாளர்கள், ஆட்டோ சங்க தலைவர் ,மததலைவர்கள், கிராமசங்க உறுப்பினர்கள் ,திருக்கோவில் எரிபொருள் நிரப்பு நிலையச்சங்க உறுப்பினர் ,பொதுமக்கள் எனபலர்; கலந்துகொண்டனர்.