திருக்கோவில் பிரதேசத்தில் வீடுவீடாக
சென்று நிதி உதவி கொடுப்பனவு வழங்கல்

0
122

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முதியோர்கள் சிறுநீரகநோயாளர்கள் விசேடதேவையுடையோர்களுக்கான மாதாந்த அரசின் உதவித் தொகை கொடுப்பனவுகள் இன்று வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு இருந்தன.

அரசின் சுற்று நிருபத்தின் பிரகாரம் மாதாந்தம் அரசினால் வழங்கப்பட்டு வந்த உதவி கொடுப்னவுகள் இம்மாதம் முதல் சமுர்த்தி வங்கியில் பயனாளியின் தனிப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்பட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக வீடு வீடாகச் சென்று கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் காஞ்சிரம்குடா கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான உதவிப் பணக் கொடுப்பனவுகளை திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நேரில் சென்று வழங்கி இருந்ததுடன் அவர்களின் நிலைமைகள் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.அசரரெத்தினம் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.