திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்வாதார
உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு

0
243

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வு திட்டமிடல் பிரிவின் கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்;.ரவீந்திரனின் ஏற்பாட்டில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்று இருந்தன.

இவ் வாழ்வாதார உதவியானது திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் திருக்கோவில் பிரதேச கால்நடை வைத்திய அலுவலகமும் இணைந்து முன்னெடுத்து இருந்தன.

திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்வாதார தொழிலாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் 05 குடும்பங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் குடும்ப அலகு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ் மானிய உதவியாக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஜே.என். ஜமால்டீன் கால்நடை வைத்திய போதனாசிரியர் எஸ்.மோகன்ராஜ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.