திருக்கோவில் பிரதேச கடலரிப்பு
குறித்து அதிகாரிகள் அவதானம்

0
234

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பின் பாதுப்புக்கள் தொடர்பாக ஆராயும் வகையில் துறைசார் அதிகாரிகள் குழு திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.திருக்கோவில் பிரதேச செயலாளரின் அழைப்பின் பேரில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தேசிய மற்றும் மாவட்ட பொறியலாளர் குழுவினர் கடலரிப்பின் பாதிப்புக்களை நேரடியாக பார்வையிட்டனர்.

இதன்போது திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.வரலாற்று பழைமை மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் பாதுகாப்புக்காக 2018ல் அமைக்கப்பட்ட கல்வேலி கடல் அலையின் தாக்கம் காரணமாக சேதமடைந்து செல்லும் விடயமும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்தேர்ச்சியாக இடம்பெற்று வரும் கடலரிப்பு காரணமாக கரையோரப் பிரதேசம் வீதிகள்
நூற்றுக் கணக்கான பயன்தரும் தென்னை மரங்கள் மீனவர் ஓய்வு கட்டடம் மற்றும் இயற்கையின் மணல் பரப்புக்கள் அழிந்து வருவதுடன் இதனை விரைவாக தடுக்குமாறும் பிரதேச செயலாளர் மற்றம் தவிசாளர் பொது அமைப்பின் பிரதி நிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட அதேவேளை, இவ்விடயங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு விரைவாக அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.இவ் விஜயத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி நிலானி றுகுனுகே மாவட்ட பொறியலாளர் எம்.துளசிதாசன் பிரதேச உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.