திருக்கோவில் பிரதேச மாணவர்களுக்கு
தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

0
230

திருக்கோவில் பிரதேச மாணவ மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி தொழிற் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாகப் பிரிவின் ஏற்பாட்டில் அம்பாரை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் 2021ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தோற்றி உயர்தரம் கற்கத் தவறிய மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்று இருந்தன.

இவ் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கானது திருக்கோவில் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீவகுமார் தலைமையில் தம்பிலுவில் தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்று இருந்தன.

அந்தவகையில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2021ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தோற்றி உயர்தரம் கற்கத்தவறிய மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடனான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நைட்டா மற்றும் வீடா ஆகிய தொழில் நுட்பக் கல்லூரி உத்தியோகத்தர்கள் திருக்கோவில் கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர்கள் உளவளத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.