திருக்கோவில் பிரதேச மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

0
159

கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் அனுமதியுடன் திருக்கோவில் பொத்துவில் பாணமை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்.

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கோமாரி பொத்துவில் மற்றும் பாணமை பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 460 ஆழ்கடல் மீனவர்களுக்கு திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மண்ணெண்ணெய் விநியோகம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் கண்காணிப்பில் இடம்பெற்றதுடன் திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் அனுமதியுடன் கல்முனை மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் அகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் மண்ணெண்ணெய் கிடைக்கப்பெற்று மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் மண்ணெண்ணெய் விநியோக ஆரம்ப நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தலைவர் மற்றும் முகாமையாளர் ஆழ்கடல் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.