அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஊடாக உலக சிறுவர் தினத்தினை ஒட்டியதாக சமுர்த்திப் பயனாளி குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது சமுர்த்தி சமுதாய அடிப்படையிலான வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.அரசரெத்தினம் தலைமையில் திருக்கோவில் சமுர்த்தி தலைமைக் காரியாலய மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் 22கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகளுக்கு 50ஆயிரம் ரூபா பெறுமதியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்