திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

0
249

அம்பாரை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் மாணவ பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று இடம்பெற்றது.

வலய மாணவர் பாராளுமன்ற நிறைவேற்று சபையின் வழிகாட்டலின் ஊடாக திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளரும் செயலாளர் நாயகமுமான வை.ஜெயச்சந்திரனின் தலைமையில் தம்பிலுவில் தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளை பிரதிபலித்து காட்டும் வகையில் சம்பிரதாய முறையிலான திருக்கோவில் வலய மாணவர்களின் நிழல் பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெற்றது.

திருக்கோவில் வலய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனங்களை திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளரும் செயலாளர் நாயகமுமான வை.ஜெயச்சந்திரன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் பிரதி செயலாளர் நாயகமுமான கமலமோகனதாஸன் ஆகியோர் வழங்கினர்.

சபாநாயகர் பிரதமர் சபை முதல்வர் பிரதிச் சபாநாயகர் பிரதி செயற்குழுத் தலைவர் உட்பட 10 அமைச்சர்கள் 10 பிரதி அமைச்சர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்ததுடன் சபைக்கு செங்கோல் எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்த திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வுகள் இடம்பெற்றது.

இம்முறைமையின் ஊடாக எதிர்காலத்தில் ஒரு ஒழுக்கமிக்க பாராளுமன்ற நடைமுறைகளை வளர்த்துக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் கல்வி அமைச்சினால் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் கமலமோகனதாசன் தம்பிலுவில் தேசிய பாடசாலை அதிபர் பா.சந்திரேஸ்வரன் மற்றும் மற்றும் துறைசார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.