திரு­டியமுச்­சக்­கர வண்­டிக்­கு போலி ஆவ­ணம் தயா­ரித்த கடற்­ப­டைச் சிப்­பாய் யாழில் கைது!

0
138

தென்­னி­லங்­கை­யில் திரு­டப்­பட்ட முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து கிளி­நொச்­சி­யில் விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் கடற்­ப­டைச் சிப்­பாய் ஒரு­வர் யாழ்.மாவட்ட விசேட குற்­றத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

முச்­சக்­கரவண்டி ஒன்­றின் ஆவ­ணங்­கள் யாழ்.மாவட்ட போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளத்­தில் சமர்ப்பிக்கப்பட்­டி­ருந்த நிலை­யில், அவைபோலி­யா­னவை என்று இரு சந்தேகநபர்களை கைது செய்து மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த பிரதானமான கடற்படை சிப்பாயை யாழ்மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது