திருநெல்வேலி சந்தை தொகுதியில் அதிக அளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கடந்த 28 ம் திகதியிலிருந்து கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பாற்பண்ணை கிராமத்தில்
பாரதி புரம் என்னும் பிரதேசம் தவிர்ந்த அனைத்து பிரதேசங்களும் கண்காணிப்பு வலய பிரதேசத்திலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் விடுவிக்கப்பட வுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.