திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் 66 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருபவர்கள் அத்தியவசிய தேவை தவிர வேறு பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று நடைபெற் கொரோனா தொற்று தொடர்பான விசேட கலந்துரையாடலின் அடிப்படையில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்றுகூடல் மற்றும் அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வைரசைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.