திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமானது.
இன்று காலை முறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலை வந்தடைந்த ஊர்தி, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று, மக்கள் அஞ்சலிக்காக தரிக்கவுள்ளது.இன்று காலை 9 மணியளவில் பொது சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அக்கராயன் வீதி ஊடாக பயணத்தை ஆரம்பித்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் குறித்த ஊர்தி அழைத்து செல்லப்பட்டு,
அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.