திஸ்ஸ விதாரண வசமானது கோபா குழுவின் தலைமைப் பதவி!

0
183

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடருக்கான அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூடிய அரச கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் அரச கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

நாடாளுமன்றத்தின் 119 (1) நிலையியல் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவால் நியமிக்கப்பட்டனர். இதன்படி அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, புத்திக பத்திரண, கே. காதர் மஸ்தான், மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறிதரன், ஹேஷா விதானகே, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

அரச செலவுகளை எதிர்நோக்குவதற்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் நாடாளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரச கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும்.

இன்றைய கூட்டத்தில் அரச கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறிதரன், வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.