தீவகத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டோருக்கு நீதிமன்றால் பத்தாயிரம் ரூபா தண்டம்!

0
132

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றால் தலா பத்தாயிரம் தண்டம் விதிக்கப்பட்டது

புளியங்கூடல் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2400 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும், வேலணை – வங்களாவடி, 1ம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2000 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும், கைது செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் நேற்றைய தினமே ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்கள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா தண்டத்தினை ஊர்காவற்துறை நீதிமன்றம் விதித்தது.