தீ விபத்துக்குள்ளான கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டிருந்தார்.