இருவேறு பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (4) மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது மதுபானம் மற்றும் துப்பாக்கிகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மதுபான சுற்றிவளைப்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 11.25 லீற்றல் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 135 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கஹவத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் சாலியாவௌ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னியாகம வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புகளில், அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
புத்தளம், சோலவௌ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28, 35 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.