ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாரதீ துஷ்மந்தவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்பைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.