தென்னிலங்கையில் உள்ள மத நல்லிணக்கம் வடக்கு, கிழக்கில் இல்லை-ஓமல்பே சோபித தேரர்

0
235

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பௌத்த விகாரைகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் மற்றும் தலையிட வேண்டிய ஏனைய தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது பிரச்சினைக்குரியது என பிரதம சங்கநாயக்க தேரர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த எசல பௌர்ணமி பொழுதன்று காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை நிகழ்வின் போது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உட்பட பிரதேசவாசிகள் சிலர் எதிராக செயற்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்னிலங்கை பௌத்த மக்கள் ஏனைய மதங்களுடன் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்றார்கள் என்றால் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏன் அவ்வாறு செயற்படுவதில்லை எனவும் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.