தென்மராட்சி கமக்கார அமைப்புக்களை தொடர்பு கொள்ளுமாறு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அறிவிப்பு!

0
175

தென்மராட்சியில் உள்ள கமக்கார அமைப்புக்களை தொடர்பு கொள்ளுமாறு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அறிவிப்பு.

சாவகச்சேரி ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் சுழற்சியான முறையில் எவ்வித குழப்பமும் இன்றி எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில்.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குள் உள்ள கமக்கார அமைப்புக்களுக்கும் பெரும் போக நெற் பயிர்ச்செய்கைக்காக டீசல் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது மழை பெய்திருப்பதால் பெரும்போக நெற்செய்கைக்காக எரிபொருள் இல்லாது விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள் அவர்களின் எரிபொருள் தட்டுப்பாட்டினை எம்மால் முடிந்தவரை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளோம்.

அந்தவகையில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் இருக்கும் கமக்கார அமைப்புக்கள் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் கமக்கார அமைப்புக்களின் ஊடாக பெரும் போக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராம சேவர் பிரிவினை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை மற்றும் QR Code கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு

தாெ.இல-: 0776668739
வைத்திலிங்கம் சிவராசா
நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்