




சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..
தேசிய மட்டத்தில் சாதனை படைத்து வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,
மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய ரீரியில் சம்பியன் பட்டத்தைப் பெற்று வெற்றி வகை சூடி தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்திருந்தனர்
அதேபோல் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .