தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய திருப்பணி வேலைகள் மும்முரமாக முன்னெடுப்பு!

0
222

தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பணிகள் துரிதமாக

தற்பொழுது சிறப்புற நடைபெற்று வருகின்றது

தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் வரும் 25.03.2024ம் திகதி நடைபெற அன்னையின் திருவருள் கூடியுள்ளது.அம்பாளின் திருவருளினால் தேவஸ்தானத்தில் தற்பொழுது திருப்பணி வேலைகள் மிகவும் சிறப்புற நடைபெற்று வருவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்தப் பணிகளை உரிய காலத்தில் முழுமையாக முடிவுறுத்தி எங்கள் அம்பாளின் மஹா கும்பாபிஷேகத்தினை மிகவும் சிறப்புற நடாத்துவதற்குரிய முழுமையான பணிகளை எமது தேவஸ்தானம் மேற்கொண்டு வருகின்றது.

எமது இந்தப் பணிகளுக்கு உலகெங்கும் பரந்து வாழும் அன்னையின் பக்தர்களிடம் இருந்து உதவிகளை எமது தேவஸ்தானம் வேண்டி நிற்கின்றது.

எனவே எமது வேதவஸ்தானத்தின் காரியாலயத்தில் நேரடியாகவோ அல்லது எமது வங்கி இலக்கங்கள் ஊடாகவோ தங்களது உதவிகளை எமது அன்னையின் திருப் பணிகளுக்கு பக்தர்கள் தங்களது உதவிகளை வழங்க முடியும்.

உலகப் புகழ்பெற்ற எங்கள் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகப் பணிகள் யாவும் சிறப்புடன் நிறைவு பெற பக்தர்களின் தாராள உதவிகளை நாங்கள் வேண்டி நிற்கின்றோம்எனஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்,