தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை! -பிரதமர்

0
4

நாட்டில் தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், நீண்டகாலமாக உரம் பெற்றுக்கொடுக்கப்படாமை, கிருமித் தாக்கம், வனஜீவராசிகளால் ஏற்பட்ட பாதிப்பு, தேங்காய் உற்பத்திக்கு முதலீட்டாளர்கள் முன்வராமை, பாரம்பரிய உற்பத்தி பிரதேசங்களில் உள்ள தென்னை மரங்கள் விளைச்சலைத் தராமை உள்ளிட்ட காரணங்களால் தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தேங்காய் உற்பத்திக்கான முதலீடுகளை உருவாக்குதல், உற்பத்தியாளர்களுக்கு அவசியமான நிவாரணக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல், வடக்கில் தெங்கு முக்கோணப் பகுதியை உருவாக்குதல், கிருமித் தொற்று ஏற்படுவதை உடனடியாக தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வீடுகளில் தேங்காய்களை வீண்விரயம் செய்வதை தடுப்பதற்கென விழிப்புணர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதற்கமைய தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஐந்து வருட திட்டமும் பத்து வருட திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.