காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான ஹோகந்தர வீடு நேற்று (18) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 795 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 214 மது போத்தல்கள் உட்பட 1009 மதுபான போத்தல்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது துப்பாக்கிகளாக கருதப்படும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மைகள் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.