தேசிய இளைஞர் சேவைகள் நிறுவனத்தினால்
இளைஞர் கழகம் ஸ்தாபிப்பு

0
221

இளைஞர் விவகார அமைச்சு கல்விஅமைச்சுடன் இணைந்து தேசிய இளைஞர் சேவைகள் நிறுவனத்தினால் பாடசாலைகளில் புதிதாக இளைஞர்; கழகங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைவாக மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் சபியதாஸ் ஒழுங்கமைப்பில் இங்குள்ள பாடசாலைகள் தோறும் இளைஞர்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுவருகின்றன.

இன்று கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் அதிபர் செல்வராசா தலைமையில் இளைஞர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ் இளைஞர் கழகங்கள் ஊடாக தலைமைத்துவபண்பு, கலைகலாசாரநிகழ்வுகள், இனநல்லிணக்கம், புரிந்துணர்வு, விளையாட்டுபயிற்சிமுகாம் ஆகியனநடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதியஅதிபர் சண்முகநாதன், இளைஞர்சேவைகள் உத்தியோகத்தர் சபியதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.