தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் பணி இடைநீக்கம்!

0
17

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் சில்வா உடன் அமுலாகும் வகையில் அந்த பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மெக்ஸ்வெல் சில்வாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றுக்கு அமைய, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தம்மை பணியிடை நீக்கம் செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் சட்டத்துக்கு புறம்பானதென மெக்ஸ்வெல் சில்வா தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.