தேசிய சிறைக்கைதிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 19 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்களில் மூன்று பேர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில், சிறிய குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.