தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் ஏ-9 வீதி, சாவகச்சேரி பகுதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அலுவலக திறப்பு விழா நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினருடன் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி
எஸ்.சிறீ.பவனந்தராஜா, அதிபர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளிர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராசலிங்கம், ஆசிரியர் காரளசிங்கம் பிரகாஸ், மென்பொருள் பொறியாளர் உதயகுமார் கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதுடன்,
பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.