தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

0
66

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாகவும், குறித்த கலந்துரையாடல்களின்போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்களருக்கு செலவிடக்கூடிய உச்சபட்ச தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.