தேர்தல் காலம் என்பதால், தேர்தலில் வாக்குவேட்டை நடத்துவதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தாம் தயாரில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.